Monday, September 7, 2020

பிரதமர் மோடியை ஏமாற்றி 11 ஆயிரம் பேர் போலி வங்கி கணக்கு மூலம் கோடிக்கணக்கில் மோசடி


      மதுரையில் கிசான் திட்டத்தில் கீழ் 11 ஆயிரம் பேர் போலி வங்கி கணக்கு மூலம் மோசடி

      Sep 07, 2020 09:39:19 PMமதுரை மாவட்டத்தில் 11 ஆயிரம் பேர், போலி வங்கி கணக்கு மூலம் கிசான் திட்ட நிதியுதவி பெற்றுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
      நிகழ்ச்சி ஒன்றில் விருதுநகர் எம்.பி மாணிக்கம் தாகூர் எழுப்பி கேள்விக்கு பதிலளித்த ஆட்சியர் டி.ஜி.வினய், 6 ஆயிரம் பேரின் வங்கி கணக்கில் இருந்து நிதியுதவியாக பெறப்பட்ட 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திரும்ப எடுக்கப்பட்டு இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

      முறைகேடு குறித்து விசாரிக்க உயர் அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், 3 நாட்களுக்குள் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு பணம் திரும்ப பெறப்படும் என்றும் அவர் உறுதிபட தெரிவித்தார்.

      மதுரை மாவட்டத்தில் நடப்பு ஆண்டில் 16 ஆயிரத்து 474 பேர் பிரதமரின் கிசான் திட்டத்தில் பதிவு செய்துள்ளனர் என்றும் ஆட்சியர் தெரிவித்தார்.


      No comments:

      Post a Comment

      Blog Archive